தஞ்சாவூர் ஜன.25.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மூன்றாம் கட்டம் தொடர்பாக ஒருங்கிணைந்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை யில் நடைபெற்றது
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியிருப்பதாவது:
முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்திரவின்படி பொதுமக்கள் அணுகும் அனைத்தும் அரசு துறை கள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு நிலை யான வழிகாட்டு நீதி முறைகளின் அடிப்படையில் மக்களுடன் முதல்வன் திட்ட முகாம் அனைத்து கிராம ஊராட்சியிலும், ஆதிதிராவி டர் குடியிருப்பு எண்ணிக்கை அதிகம் உள்ள பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.
இதில் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து பொதுமக்கள் கோரிக்கைகள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்டத்தை செயல்படுத்தவும் அரசாணை மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ள ன . இத்திட்டம் தொடர்பாக நடந்த ஆய்வு கூட்டத்தில் மின்சாரத்துறை வருவாய்த்துறை ஊரக வளர்ச்சி துறை சமூக நலத்துறை பிற்பட்டோர் நலத்துறை ஆதிதிராவிட நலத்துறை காவல்துறை சுகாதாரத்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வேளாண்மை துறை உள்பட 15 துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முகாம் சேவைகளை மக்களுக்கு பயனுள்ள வகையில் சிறப்பாக நடத்திட அனைத்து துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது .இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி மாவட்ட ஆட்சியர் (பயிற்சி) உத்கர் ஷ்குமார், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சரவணன் , சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆட்சியர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.