இளையான்குடி: மார்ச்:07
இளையான்குடி ஒன்றியம் தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோவிலில் மானாமதுரை தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இதில் சட்டமன்ற உறுப்பினர் மேனாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவுகளை பரிமாறினார்.
முன்னதாக தடியமங்கலம், நாகமுகுந்தன்குடி, தாயமங்கலம் பள்ளிகளில் குழந்தைகளுக்கு நாற்காலி, மேசை, அசைவ உணவு, நோட் புத்தகம் , எழுது பொருள்கள், இனிப்பு வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு இளையான்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியசன் தலைமை வகித்தார். மானாமதுரை தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கி.கண்ணன், ஒன்றிய துணை செயலாளர் தமிழ்செல்வி பாலசுப்பிரமணியன் செயலாளர்கள் சேகர், சத்தியேந்திரன், கோபி முன்னிலை வகித்தனர். பள்ளி குழந்தைகளுக்கு உணவு, இனிப்பு, எழுது பொருள்களையும், மதிய உணவையும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் வழங்கினார். இந்நிகழ்வில் கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் சுப.தமிழரசன் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காளிமுத்து மாவட்ட பிரதிநிதிகள் சாரதி(எ) சாருஹாசன், சேதுபதி துரை துணை செயலாளர்கள் சிவனேசன், கருணாகரன், சுந்தரம், ராஜகோபால், ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.