புதுச்சேரி ஏப்ரல் 17 புதுச்சேரி
விநாயகா மிஷன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை (VMSH) திறப்பு விழா ஒரே இடத்தில்
முழுமையான மருத்துவ சேவையளிக்கும் விதமாக உயர் சிறப்பு அதி நவீன மருத்துவமனையான, விநாயகா மிஷன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த விழாவில் உள்துறை அமைச்சர்
அ. நமச்சிவாயம் , பொது பணித்துறை அமைச்சர் கே. லட்சுமிநாராயணன் , சட்டமன்ற சபாநாயகர் ஏம்பலம் ஆர். செல்வம், துணை சபாநாயகர்
பி.ராஜவேலு மற்றும் கிருமாம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் யு. லட்சுமிகாந்தன், பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.ஆர். செந்தில்குமார் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இந்த நிகழ்ச்சிக்கு விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஏ.எஸ். கணேசன், தலைமை தாங்கினார். புதுச்சேரியில் பல்வேறு மருத்துவமனைகள் இருந்த போதிலும், ஒரே இடத்தில் விரிவான, மேம்பட்ட சிகிச்சை வழங்கும் ஒருங்கிணைந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இல்லாததன் காரணமாக, சிறப்பு சிகிச்சைக்காக நோயாளிகள் சென்னை மற்றும் அதற்கும் அப்பால் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதை கருத்தில் கொண்டு இந்நவீன மருத்துவமனையை புதுச்சேரி மக்கள் பயன்பெரும் வகையில் அமைய முயற்சி எடுத்து இன்று முதல் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் விநாயகா மிஷன்ஸ் துணைத் தலைவர் டாக்டர் அனுராதா கணேசன், முதன்மை வியூக அதிகாரி சுரேஷ் சாமுவேல், மருத்துவ இயக்குநர் டாக்டர் ஹரி மேனன், ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (AVMCH)-இன் நிர்வாகிகள்,
டாக்டர் கே. தாமோதரன் (டீன்(பொறுப்பு), முன்னாள் ஜிப்மர் இயக்குநர் டாக்டர் விஷ்ணு பட், முன்னாள் எய்ம்ஸ்- போபால் இயக்குநர் டாக்டர் சர்மான் சிங், துணை டீன் (நிர்வாகம்) டாக்டர் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் மருத்துவமனையை முதல்வர் திறந்தார்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics