நாகர்கோவில் ஜூலை 1
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகரில் அருள்மிகு செண்பகவல்லி இசக்கி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இக்கோவிலில் இந்த ஆண்டு 38 வது கொடை விழா நடைபெறுகிறது. கோவில் திருவிழா காலை கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. அதனை தொடந்து அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. மேலும் மதியம் அன்னதானம் நடை பெறும். மாலை பெண்களுக்கான திருவிளக்கு பூஜை நடை பெரும் அதனை தொடர்ந்து அம்மனுக்கு நையாண்டி மேளம், முழங்க வில்லிசையோடு தீபாராதனைகள் நடை பெற இருக்கின்றது. மேலும் திருவிழாக்கள் 3 நாட்கள் நடை பெற இருக்கின்றன.