வேலூர் ஏப்: 30
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், சிங்கா ரெட்டியூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தில் 26 ஆம் ஆண்டு ஈஸ்வரன் மலை சுற்றும் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் அம்மனுக்கு பொங்கலிடுதலும் , சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், ஆராதனையும் ,ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கல்யாணமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மனை தரிசித்தனர்.