ஈரோடு மார்ச் 2
காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை தலைவரும் ரெயில்வே பாதுகாப்பு குழு முன்னாள் உறுப்பினருமான கே என் பாட்சா தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது
ஈரோடு ரெயில் நிலையம் நிறுத்தும் இடத்தில் 2 சக்கர வாகனங்களுக்கு 2 மணி நேரத்திற்கு ரூ. 10 கட்டணம் வசூல் செய்கிறார்கள் .பிறகு அதே 2 சக்கர வாகனங்கள் 250 சிசிக்கு மேல் உள்ள இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ. 15 கட்டணம் இரண்டு மணி நேரத்திற்கு வசூல் செய்கிறார்கள்.
பொதுவாக இரண்டு சக்கர வாகனங்களுக்கு மட்டும்தான் கட்டணம் வசூல் செய்ய வேண்டும். 250சிசிக்கு மேலே உள்ள வாகனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதும் தலைக்கவசத்துக்கும் (ஹெல்மெட்) ரூ. 10 வசூலிப்பதும் கண்டிக்கத்தக்கது. எனவே இரண்டு சக்கர வாகனங்களுக்கு ஒரே மாதிரியான கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் இரண்டு சக்கர வாகனங்களுக்கு 24 மணி நேரத்திற்கு நாள் ஒன்றுக்கு ரூ
.30 ம் 250 சிசி மேல் உள்ள வாகனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ
.40 ம்கட்டணமும் வசூல் செய்கிறார்கள் ஒரு நாளுக்கு மேல் சென்றால் கூடுதலாக கூடுதல் கட்டணமாக ரூபாய் 35-ம் ரூபாய் 45ம் கட்டணம் நாளுக்கு நாள் அதிகரித்து சென்றால் கூடுதலாக நான்கு நாட்களுக்கு 180 ரூபாய் கட்டணம் கட்ட சொல்லி பயணிகளை வற்புறுத்துகிறார்கள். இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே கூடுதல் கட்டணம் வசூலிப்பதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.