திண்டுக்கல் மாவட்டம் நேருஜி நகரில் உள்ள புனித ஜான்பால் அகாடமியின் (CBSE) நிர்வாக கட்டிட திறப்பு விழாவிற்கு திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் மேதகு பி. தாமஸ் பால்சாமி முன்னிலையில், LN.DR. நாட்டாண்மை N.M.B. காஜா மைதீனுக்கு பள்ளியின் தாளாளர் Fr.பன்னீர்செல்வம் அவர்கள் பொன்னாடை போர்த்தி மத நல்லிணக்கத்திற்காக பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வில் திண்டுக்கல் மறை மாவட்ட முதன்மைகுரு சகாயராஜ், திண்டுக்கல் மறை மாவட்ட பொருளாளர் சாம்சன் ஆரோக்கியதாஸ் , EX.MLA பாலபாரதி , திருவருட் பேரவையின் இணைச் செயலாளர் திபூர்சியஸ் மற்றும் அருட் தந்தையர்கள், அருட் சகோதரிகள், ஆசிரியர்கள், பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.



