கன்னியாகுமரி, நவ: 28
மயிலாடி பேரூர் திமுக சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மயிலாடி அரசு தொடக்கப்பள்ளியில் (கிழக்கு) நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மயிலாடி பேரூர் செயலாளர் மயிலை டாக்டர் சுதாகர் தலைமை தாங்கி
மாணவ மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் நோட்டு புத்தகம், பேனா, பென்சில், ரப்பர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறுபான்மை துணை அமைப்பாளர் வேதமணி, திமுக நிர்வாகிகள் ராமச்சந்திரன், தனசீலன், மாணிக்கம், ராஜேஷ், மதன், பன்னீர் தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.