நிர்வாகி பிபி ராஜா ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது!
ராமநாதபுரம், டிச.27-
தொண்டியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தந்தை பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் நிர்வாகி பி.பி.ராஜா ஏற்ப்பாட்டில் பெரியார் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக வெற்றி கழகம் நிர்வாகி பி பி ராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குணசேகரன், மணக்குடி இளையராஜா மற்றும் தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிர்வாகி பி.பி.ராஜா கூறும் போது;
தமிழக வெற்றி கழகம் சார்பில் இன்று தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கினோம். தமிழக வெற்றி கழகம் தலைவர் மற்றும் பொது செயலாளர் ஆணைக்கிணங்க மக்கள் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து செய்து வருகிறோம். அத்துடன் தலைவர்கள் நினைவு தினங்களில் மரியாதை செலுத்தி அவர்கள் ஞாபகார்த்தமாக அன்னதானம் வழங்குவதை கடைபிடித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.