ராமநாதபுரம், டிச.6-
ராமநாதபுரம் தேவேந்திரர் நகர் கெத்செமனே சபை சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் மற்றும் பண்டிகை பரிசு வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் மதுரை ரோடு தேவேந்திரர் நகரில் உள்ள கெத்செமனே சபை கிறிஸ்துவ ஆலயத்தில் மத நல்லிணக்கமாக ஜாதி மத பேதமின்றி கிறிஸ்துமஸ் பண்டிகை விழா கொண்டாடப்பட்டது. விழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர். செனாய்டு பெந்தகோஸ்தே சபை சார்பில் ஜாதி மத பேதமின்றி தூய்மை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர், வயோதிகர்கள் மற்றும் விரும்பியவர்களுக்கு பண்டிகை முன்னிட்டு பரிசு தொகுப்பு, இனிப்பு வழங்கப்பட்டது.
இவ்விழாவில்
செனாய்டு பெந்தகொஸ்தே சபை தேசிய பொருளாளர் ஜான்சன் பாண்டியன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து பண்டிகை பரிசு தொகுப்பை வழங்கினார். ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் கார்மேகம், துணை சேர்மன் பிரவீன் தங்கம், செனாய்டு பெந்தகொஸ்தே சபை மாவட்ட செயலாளர் ஆனந்தன் அல்போன்ஸ் உள்பட பலர் பங்கேற்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறி பேசினர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.