விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடெங்கும் எழுச்சியாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 395 விநாயகர் சிலைகள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. ஆங்காங்கே கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.
மயிலாடுதுறை காமராஜர் சாலையில் உள்ள கண்கொடுத்த விநாயகர் கோயில் இருந்து 10 வது ஆண்டாக விநாயகர் சிலை பம்பை மேளம் முழங்க பச்சை காளி, பவள காளி ஆட்டத்துடன் வானவெடி ஒலிக்க பாஜக நகர உறுப்பினர் சேர்க்கை பொருப்பாளர் மோடி.கண்ணன் தலைமையில் ஊர்வலமாக காசிக்கு நிகரான காவிரி துலா கட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டு கலைக்கப்பட்டது. இதில் மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், கோவி சேதுராமன், நாஞ்சில் பாலு, இந்து முன்னணி சாமிநாதன் உள்ளிட்ட பாஜகவை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், காவிரியில் தண்ணீர் இருப்பதால் ஏராளமான விநாயகர் சிலைகள் ஆங்காங்கே கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை ஏற்பாட்டாளர்களுக்கு இந்து முன்னணி சார்பில் காவி துண்டு அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.



