கூட்டத்தில் கவுன்சிலர் ராஜேந்திரன் ஆதங்கம்!
ராமநாதபுரம், டிச.22-
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒன்றிய பெரும் தலைவர் முத்துலட்சுமி முனியசாமிபாண்டியன் தலைமையில் ஆனையாளர் ஜெயஆனந்த் துணை பெரும் தலைவர் ஆத்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மேனேஜர் முனியசாமி அனைவரையும் வரவேற்றார். மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு;
தனிச்சியம் ராஜேந்தின்: சிறைக்குளம் ஊராட்சி மற்றும் தனிச்சியம் ஊராட்சிக்கு காவேரி கூட்டு குடிநீர் வருவது இல்லை. இதனால் பொதுமக்கள் ஊரணி நீரை குடிப்பதால் பல்வேறு சுகாதார பிரச்சனைகள் ஏற்படுகிறது. குடிநீர் வாரிய பொறியாளரிடம் பேசி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவலியுறுத்தினார்.
ஆத்தி (துணை சேர்மன்) : ஹைமாஸ் விளக்கு எரிய வில்லை. பழுதுபார்க்க வேண்டும்.
ஜெய ஆனந்த் (ஆனையாளர்) : உடனடியாக பழுதுபார்க்க நடவடிக்கை எடுக்கப்படும் முருகன் (நரிப்பையூர் ): நரிப்பையூர் கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. நரிப்பையூர் கடற்பகுதியில் தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கவுன்சிலர்களிடையே விவாதங்கள் நடைபெற்றது. முடிவில் கணக்காளர் ரமேஷ் நன்றி கூறினார்.