புதுக்கடை, ஜன – 31
கருங்கல் அருகே உலகன்விளை என்ற இடத்தை சேர்ந்தவர் சுவாமிதாஸ் மகன் அபின் (26). இவர் ஹிட்டாச்சி வாகன டிரைவர். ஒப்பந்ததார்களின் கீழ் சாலைப் பணி செய்து வருகிறார் . நேற்று காலை ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் புதுக்கடை அருகேயுள்ள பாஞ்சிவிளை என்ற பகுதியில் சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதி ராஜையன் (61) என்பவர் அபினை பார்த்து தகாத வார்த்தைகள் பேசியுள்ளார்.
தொடர்ந்து அவர் கையில் வைத்திருந்த மண்வெட்டியால் அபின் தலையில் வெட்டியுள்ளார். மேலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த அபின் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். புதுக்கடை போலீசார் ராஜையன் மீது வழக்கு பதிவு செய்தனர்.