தாம்பரம்
வாழ்வின் இலக்குகளை நிர்ணயிக்க வெற்றிப் பாதையில் பயணிக்க ஒவ்வொருவர்க்கும் வழிகாட்டுதல் மிக அவசியமாகிறது. அதிலும் மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் வழிகாட்டுதல் என்பது இன்றைய காலக்கட்டத்தில் மிக இன்றியமையாததாக உள்ளது. அந்த வகையில் இதற்காக முடிச்சூரில் உள்ள ஸ்ரீ.எஸ். பதல்சந்த் அகல்குவூர் சோர்டியா விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
ஜனவரி 26, 2005 காலை நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னையில் உள்ள இராணுவ பயிற்சி மையத்தின் அதிகாரி திரு. கர்னல் ஷைலேஷ் பி.ராவ் அவர்கள் கலந்து கொண்டு இராணுவ பயிற்சி மையத்தில் மாணவர்கள் பயில தேவைப்படும் கல்வித் தகுதிகள், வயது, அதற்கான வழிமுறைகளை குறித்து மாணவர்களிடம் விளக்கமாக எடுத்து கூறினார்.
இராணுவ பணிகளில் சேர எழுதப்படும் நுழைவுத் தேர்வுகளையும், பயிற்சிகள் குறித்தும் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பல்வேறு தகவல்களை பரிமாறி கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியை திருமதி V. அமுதவல்லி அவர்களின் தலைமையில் மாணவ மாணவிகள் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியன், இந்தியக் குடிமைப் பணிகள், கப்பற்படை, செயற்கை நுண்ணறிவு பற்றியும் சமஸ்கிருதம் பயின்று பெறும் பட்டங்கள் வழியே நாம் பெறும் வேலை வாய்ப்புகள் குறித்தும் பல தகவல்களை மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் விளக்கி கூறினார்கள். பெற்றோர்களும், 9,10,11,12 பயிலும் மாணவர்களும் கலந்து கொண்டு பல்வேறு இயங்களைக் கேட்டு தெளிவு கண்டனர். இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.