மதுரை ஜூலை 25,
மதுரையில் இருதய செயலிழப்பு சிகிச்சை மாநாடு
மதுரையில் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இருதயவியல், மின் இயற்பியல் துறை சார்பில் இருதய செயலிழப்பு சிகிச்சை சிறப்பு மாநாடு நடைபெற்றது. இந்த
மாநாட்டில் அவசர மருத்துவத்துறை, மயக்க மருந்தியல், துறை இருதயவியல் துறை, பயிற்சி மருத்துவர்களை உள்ளடக்கிய 300 முதுநிலை மாணவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் இருதய செயலிழப்பு குறித்த எலக்ட்ரோ பிசியாலஜிக்கல் நிபுணர்கள் விளக்கம் அளித்தனர். இதில் மதுரை மீனாட்சி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் ஏராளமான ஒரு பங்கேற்று பயனடைந்தனர்.