திண்டுக்கல் மே:28
திண்டுக்கல் ஹெல்த்திஃபை வெல்நெஸ் சென்டர் மற்றும் திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசல் மற்றும் ஜங்ஷன் பள்ளிவாசல் இணைந்து பொதுமக்களுக்கான இலவச புட் பல்ஸ் தெரபி முகாம் நிகழ்ச்சி நாகல் நகர் பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசல் மற்றும் ஜங்ஷன் பள்ளியின் தலைவர் கே.எஸ்.ஓ.பி.
அகமதுபுகாரி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு தெரபி ஆலோசகர்கள் சையது அபுதாஹிர், பாஹியா கான், பஷீர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசல் இமாம் மௌலானா அப்துல் ரஹ்மான் யூஸுபி, கிராத் ஓதி முகாமை துவக்கி வைத்தார்.
இதில் திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஏ.கே.அலாவுதீன், சௌகத்அலி மற்றும் மௌலானா நிஜாமுதீன் உலவி, எஸ்.ஹக்கீம், கவுன்சிலர் பௌமிதாபாரூக், ஜமாஅத்தார்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி
27-05-2024 தேதி முதல் 10-06-2024 தேதி வரை 15 நாட்களுக்கு நடைபெற உள்ளது. புட் புல்ஸ் தெரப்பி எடுப்பதினால் உடம்பில் உள்ள குறிப்பாக சர்க்கரை, பாத எரிச்சல், மூட்டு வலி, தைராய்டு, ரத்தசோகை, பக்கவாதம் இன்னும் எண்ணற்ற வியாதிகள் குணமடைவதற்கும் குறிப்பாக பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனை, வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை, நீர்க்கட்டி, குழந்தையின்மை, தாம்பத்தியத்தில் உள்ள தீர்வு கிடைக்கும் என்று இம்முகாமில் தெரிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான
பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்