நாகர்கோவில் அக் 6
தமிழககேபிள்டிவி ஆப்பரேட்டர்கள் பொதுநலசங்கம் கூட்டம் மாவட்டதலைவர் இராதாகிருஷ்ணன் தலைமையில் ,செயலாளர் இராமகிருஷ்ணன்,பொருளாளர் ரெஜிபால் ஆகியோர் முன்னிலையில் குலசேகரம் , கருங்கல் , நாகர்கோவில் அலுவலகங்களில் நடைபெற்றது. கூட்டத்தில் விஜய் டிவி மற்றும் கட்டண சேனல்களின் கட்டண உயர்வு ரத்து செய்யக்கோரி ஆபரேட்டர்கள் கோரிக்கை வைத்து கருத்துக்களை கூறினர். இதில்
குலசேகரம் கிளை ,மார்த்தாண்டம் கிளை, குளச்சல் கிளை, தக்கலை நாகர்கோவில்,புறநகர் ,கிளை ஆபரேட்டர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பொதுமக்களை பாதிக்கும் விஜய் டிவி மற்றும் சேனல்களின் கட்டணஉயர்வை ரத்துசெய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றபட்டது.மாநில தலைமை எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட்டு தொழிலை முன் எடுப்பது என்றும், தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் குலசேகரம் கிளை செயலாளர் டைட்டஸ் ராஜன் மார்த்தாண்டம் கிளைச் செயலாளர் சித்தார்த்தன், தக்கலை கிளை தலைவர் சிதம்பரம் ,செயலாளர் ராஜசேகர் குளச்சல் கிளை தலைவர் சசிகுமார், செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் மார்ட்டின், நாகர்கோவில் தலைவர் கிருஷ்ணச்சந்திரன் செயலாளர் சுப்பிரமணி பொருளாளர் ரமேஷ் புறநகர் தலைவர் மெர்சலின் கன்னியாகுமரி கிளை இசக்கி முத்து செயலாளர் ராஜன் பொருளாளர் பாலன் தோவாளை கிளை தலைவர் கார்த்திகேயன் செயலாளர் முருகேசன் பொருளாளர் டென்சிங் பிரைட் மற்றும் ஜார்ஜ், சுரேஷ், பெஞ்சமின் செந்தில் , ராஜ்குமார் கர்ணாதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



