குளச்சல் அக் 21
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த ஷேக் முகமது என்பவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். சம்பவத்து அன்று இவர் அரசு பேருந்து TN- 74 N 1723 என்ற எண் கொண்ட பேருந்தில் மணவாளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து அவரது மனைவி, மற்றும் மகனுடன் பேருந்தில் ஏறி குளச்சலுக்கு இரண்டு பயண சீட்டு கேட்டுள்ளார். அவருக்கு மாற்றுத்திறனாளி பேருந்து இலவச பயண அட்டை இப்பதால் அவருக்கு பயணச்சீட்டு எடுக்க வில்லை ஆனால் இலவச பேருந்து அட்டையை காட்டியும் நடத்துனர் கண்டிப்பா நீங்களும் பயண சீட்டு எடுக்க வேண்டும் என்று வலுக்கட்டாயமாக பயணச்சீட்டு கொடுத்து அதற்கான பணமும் வாங்கி உள்ளார். மாற்றுத்திறனாளிக்கு அரசு பேருந்தில் இலவசமாக செல்ல அரசு தரப்பில் இலவச பேருந்து அட்டை வழங்கியிருந்தும் அதனை ஏற்க மறுத்து வலுக்கட்டாயமாக பயணச்சீட்டு வழங்கிய அரச பேருந்து நடத்துனர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாற்றுத்திறனாளி சார்பில் போக்குவரத்து துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளியை அவமதித்து அரசு பேருந்து நடத்துனர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்குமா? என சமுக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.