தஞ்சாவூரில் இருந்து புதிய வழித்தடங்களில் பஸ் இயக்கம்
எம்.பி. – எம்.ஏ. ஏக்கள் – மேயர்
கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
தஞ்சாவூர் மார்ச்.17.
தஞ்சாவூர் பழைய பஸ் நிலையத் தில் இருந்து புதிய வழித்தடங்களி ல் பல பஸ்கள் இயக்கம் தொடக்க விழா நடந்தது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் வழிகாட்டுதலின் பேரில் தஞ்சாவூர் பழைய பஸ் நிலையத் திலிருந்து (தடம் எண்.பி27 ) அயனாபுரம் வரை இயக்கப் பட்டதை காங்கேயம்பட்டி வரை தட நீட்டிப்பு மற்றும் தஞ்சாவூா்-சில்லத்தூர் (தடம் எண்.ஏ36ஏ), தஞ்சாவூர்- பாபநாசம் (ஏ16), தஞ்சாவூர்- குருவாடிபட்டி (ஏ47ஏ ) ஆகிய வழித்தடங்களுக்கு புதிய பஸ்கள் இயக்க தொடக்க விழா நடைபெற்றது.
இந்த பஸ்கள் இயக்கத்தை ச.முரசொலி எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் .துரை சந்திரசேகரன்,.டி.கே.ஜி. நீலமேகம், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா , மேயர் சண் ராமநாதன் ,துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் பொது மேலாளர் .ஸ்ரீதரன், துணை மேலாளர் (வணிகம்) தமிழ்ச்செல்வன், தஞ்சாவூர் -2 கிளை மேலாளர் சந்தானராஜ் சுசியன், உதவி பொறியாளர் . சரவணகுமார், தஞ்சாவூர் தாசில்தார் .சிவகுமார், தொ.மு.ச பொதுச் செயலாளர் .பாண்டியன், ஏ.ஐ.டி.யூ.சி போக்குவரத்து மாநில துணைத்தலைவர்.துரை மதிவாணன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.