தேனி.
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சரத்துப்பட்டி, லெட்சுமிபுரம், மதுராபுரி அரசுப்பள்ளிகளில் காலை உணவுத்திட்டம், நூலகம், நாற்றுப்பண்ணை (Nursery), தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் இதர பணிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
நடப்போம் நலம்பெறுவோம் திட்டத்தின் கீழ் பெரியகுளம் நகராட்சி அலுவலகம் திருவள்ளுவர் சிலை முன்பு தொடங்கி, சோத்துப்பாறை அணை சாலை வழியாக புதிய விளையாட்டு மைதானம், தீர்த்த தொட்டி சென்று அழகர்சாமிபுரம் வழியாக. VRB நாயுடு சாலை புதிய பேருந்து நிலையம், வரதப்பர் ரோடு ஆடுபாலம் வழியாக மீண்டும் திருவள்ளுவர் சிலை வரை 8 கீ.மி தூரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைப்பயண பேரணி நடைபெற்றது. இப்பேரணியில், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
லெட்சுமிபுரம், சரத்துப்பட்டி, மதுராபுரி ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், உணவின் தரம் மற்றும் சுவை குறித்து உணவருந்தி, மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
அழகாபுரியில் உள்ள நூலகம் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்படுகிறதா என்றும், போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் இருப்பில் உள்ளதா என்றும் புத்தகங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு,வாசகர்களுக்கு வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
அழகாபுரியில் உள்ள நாற்றுப்பண்ணையில் (Nursery) தரமான கன்றுகள் வளர்க்கப்படுகின்றதா என்றும், விற்பனை செய்ததற்கான பட்டியல்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்றும், அதிக அளவில் விற்பனை செய்யப்படும் கன்றுகள் குறித்தும், தயாரித்தல் முறை மற்றும் பராமரிக்கப்படும் விதம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சொக்க தேவன்பட்டியில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வரும் பணியினையும், புதிதாக மரக்கன்றுகள் நடவு செய்வதற்கான பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரக்கன்றினை நடவு செய்து தொடங்கி வைத்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, மகளிர் திட்ட இயக்குநர் .ரூபன் சங்கர் ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் .ஜெகதீஸ் சந்திரபோஷ் உள்ளிட்ட பலர் இருந்தனர்.