நாகர்கோவில் ஜூன் 20
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அயனிகூண்டு பகுதியை சேர்ந்தவர் இயேசுதாஸ் இவரது மகன் சைன் ஜோன்(33), கூலி தொழிலாளி, இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு , திருமணம் ஆகவில்லை, சைன் ஜோஸ் வீட்டிலிருந்து நேற்று முன்தினம் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காத நிலையில் பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் பளுகல் கூடலூர் கோணம் குளத்தின் அருகாமையில் உள்ள கால்வாயில் சடலமாக கிடப்பதாக பளுகல் காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது சைன் ஜோஸ் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் தவறி விழுந்து அடிபட்டு இறந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


