மயிலாடுதுறையில் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் ரத்ததான விழிப்புணர்வு பேரணி; மாணவர்கள் கையில் பதாகைகள் ஏந்தியும் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும் முக்கிய வீதிகளின் வழியே பேரணியாக சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இரத்ததான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கூறைநாடு அருகே துவங்கிய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். 500 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி (எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் பள்ளி) மாணவ,மாணவிகள் இரத்த தானம் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், இரத்ததானம் வழங்குவதன் அவசியத்தை வலியுறுத்தியும் பல்வேறு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு முக்கிய வீதிகள் வழியே பேரணியாக சென்று பொதுமக்களிடையே இரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் பள்ளியின் தலைவர் மோகன்ராஜ், தாளாளர் வெற்றி வேந்தன், பள்ளி முதல்வர் ஹரிஹரசுதன், துணை முதல்வர் கார்த்திகேயன், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.