ராமநாதபுரம், ஜன.24-
ராமநாதபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தரணி முருகேசன் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தித்து ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மீது கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி இந்துக்களின் புனித தளமான திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி தனது சகாக்களுடன் மாமிசம் உணவுகளை உண்டுள்ளார். மேலும் காவல்துறையினரை அழைத்து மாமிச உணவுகளை மேலே கொண்டு செல்பவர்களை தடுக்கக் கூடாது என்றும் மிரட்டும் வகையில் பேசியுள்ளார். அதனால் திருப்பரங்குன்றம் மழையின் மாண்பு மற்றும் மழையின் புனித தன்மையை கெடுத்துள்ளார். இந்து மதத்தின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் எத்தனையோ மக்கள் நல பணி அப்படியே உள்ள நிலையில் தற்போது இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதுடன் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்து வருகிறார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் பல நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் வகையில் தான் அரசாட்சி இருக்கும். அதற்கு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றி வைக்கிற மாதிரி ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனிங்கின் செயல் அமைந்திருக்கிறது. இது திட்டமிட்டு மதக் கலவரத்தை உருவாக்கிய ஆகவேண்டும் என்ற ஒரு கெட்ட நோக்கத்துடன் செயல்படுவது போல் உள்ளது. குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மத மோதல் ஏற்படாமல் இருக்க ஆவண செய்ய வேண்டும்
இவ்வாறு புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.