குளச்சல், பிப்- 12
மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் மண்டைக்காடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு சதீஷ் மண்டைக்காடு சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் உடன் சேர்ந்து ஏவிஎம் கால்வாய் சந்திப்பு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது குளச்சல் நோக்கி சென்று கொண்டிருந்த பைக் ஒன்றை சதீஷ்கை காட்டி நிறுத்தினார். ஆனால் அந்த பைக் கண்மூடித்தனமாக வேகமாக சென்று சதீஷ் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சதீஷ் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடினார். ஆனால் விபத்து ஏற்படுத்திய நபர் பைக்கின் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்.
இதை கண்ட சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் உடனடியாக சதீஷை மீட்டு நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி சிகிச்சைக்கு சேர்த்தார். போலீசார் நடத்திய விசாரணையில் சதீஷ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற பைக் கோடி முனையை சேர்ந்த ஜார்ஜ் மகன் ஆரோக்கிய ஸ்டஜின் (19) என்பது தெரிய வந்தது. மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.