தமிழக கூடைப்பந்து அணியினர் உயர்கல்வித்துறை அமைச்சர்
முனைவர் கோவி.செழியன் பாராட்டு
தஞ்சாவூர், ஜன.6.
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதான வளாகத்தில்
முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாளை யொட்டி பள்ளி மாணவ- மாணவி களுக்கான சைக்கிள் போட்டி நடைபெற்றது. போட்டியை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போட்டியில் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவி கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டியானது தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கி பாலாஜி நகர், ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி சாலை வழியாக சென்று பிள்ளையார்பட்டி ரவுண்டானா, வல்லம் பெரியார் சிலை வந்தடைந்து, மீண்டும் அதே வழியில் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் முடிவடைந்தது.
போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும், 4 முதல் 10-ம் இடங்களை வரை பிடித்தவர் களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.250 வீதம் காசோலையாக வழங்கப்பட்டது.
முன்னதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் டேவிட் டேனியல் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தடகள பயிற்றுநர் தெய்வ சிகாமணி நன்றி கூறினார்.
முன்னதாக பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் நடைப்பெற்ற 68வது தேசிய அளவிலான இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நடத்திய கூடைப்பந்து போட்டியில் 19 வயது க்குட்பட்ட கூடை ப்பந்து அணி முதல் முறை 3வதாக தேர்வு செய்யப்பட்ட தமிழககூடைப்பந்து அணியினரை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் பாராட்டி வாழ்த்தினார்.
உடன் தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி திருவையாறு சட்டமன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்ட செயலாளருமான துரை. சந்திர சேகரன் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜே நீலமேகம், தஞ்சாவூர் மேயர் சண். ராமநாதன் துணை மேயர் அஞ்சுகம் பூபதி மாவட்ட திட்டக்குழு தலைவர் மற்றும் ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி,
முதன்மை கல்வி அலுவலர்
அண்ணாதுரை,மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் ,மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பெ.கற்பகம்,மாவட்ட தடகள பயிற்றுனர் இரா.தெய்வ சிகாமணி அணியின் பயிற்சியாளர்கள் செல்வி பாலகுமாரி உட ற்கல்வி இயக்குனர் பிரகாஷ் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.