கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணை துவாரகா மெட்ரிக் மேல்நிலைபள்ளி 10ம் வகுப்பு மாணவ மாணவிகள் 100% தேர்ச்சி: கிருஷ்ணகிரி.மே.17 கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய முத்தூர் கே.ஆர்.பி அணை அருகே அமைந்துள்ள துவாரகா மெட்ரிக் மேல்நிலைபள்ளி பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் எஸ்.புனீத்குமார் என்ற மாணவர் முதலிடமும், ஆர்.கார்த்திகா ஸ்ரீ என்ற மாணவி இரண்டாம் இடமும் பெற்றனர். இதில் தேர்வு எழுதிய 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 400 மதிப்பெண் மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பினை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகள், வழிகாட்டியாக இருந்த ஆசிரியப் பெருமக்கள் மற்றும் ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்களுக்கு பள்ளியின் நிர்வாகம் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
பட விளக்கம்:தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு துவாரகா மெட்ரிக் மேல்நிலைபள்ளி ஆசிரியர்கள் இனிப்பினை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.



