By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழா

Last updated: October 11, 2024 11:19 am
October 11, 2024 27 Views
Share
SHARE

கன்னியாகுமரி அக் 11 

 

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் நவராத்திரி விழாவிற்கு புனித நீர் எடுத்துச் செல்வதற்கும், பிற வழிபாடுகளுக்கும் யானை வழங்காததைத் கண்டித்து பக்தர்கள் இரவில் கோயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.பக்தர்களுக்கு ஆதரவாக  கன்னியாகுமரியில் வியாபாரிகள் கடைகளை அடைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

கன்னியாகுமரி பகவதியம்மன் திருக்கோயிலில் ஆண்டு தோறும் 10 நாள் நடைபெறும் நவராத்திரி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இத்திருவிழாவின்போது மன்னர்கால பாரம்பரிய முறைப்படி விவேகானந்தபுரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோயில் சர்க்கரை தீர்த்தக் கிணற்றிலிருந்து புனித நீர் யானை மீது வைத்து எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும். சாமி ஊர்வலத்திற்கும் யானை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் கடந்த வைகாசி திருவிழாவுக்கு யானை வரவழைக்கபடவில்லை. இது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நவராத்திரி திருவிழாவுக்கு யானையை வரவழைக்க வேண்டும் என பக்தர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து அறநிலையத் துறை இணை ஆணையருக்கு மனு கொடுக்கப்பட்டது. கடந்த 3ம் தேதி நவராத்திரி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், இவ்விழாவுக்கும் யானை வரவில்லை. இதனால் கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் நவராத்திரி திருவிழாவின்போது பாரம்பரிய முறைப்படி யானை மீது புனித நீர் எடுத்து செல்ல முடியவில்லை.

இதை கண்டித்து கடந்த 7ம் தேதி கன்னியாகுமரி பழைய பேருந்து நிலைய ரவுண்டானாவில் பக்தர்கள், மற்றும் கிராம மக்கள் ஆர்பாட்டம் நடத்தினர். இதில் 48 கிராமங்களைச் சேர்ந்த ஊர் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில்,  திடீரென ஏராளமான பக்தர்கள் பகவதியம்மன் கோயில் முன்பு திரண்டனர். அவர்கள் நவராத்திரி விழாவுக்கு உடனடியாக யானையை வரவழைத்து பூஜை முறைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது அறநிலையத் துறையினர், வனத் துறையிடம் அனுமதி பெற்று யானையை பகவதியம்மன் கோயிலுக்கு வரவழைத்து விழாவில் பயன்படுத்தப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.ஆனால் நேற்று மதியம் வரை பகவதியம்மன் கோயிலுக்கு யானை வரவில்லை. இதனால் இந்து அறநிலையத் துறையினரும் மாவட்ட நிர்வாகமும் தங்களை ஏமாற்றுவதாக கூறி  கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக பக்தர்கள் அறிவித்தனர். அதற்கு வியாபாரிகளும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து  கன்னியாகுமரி கடற்கரை, காந்தி பஜார், பார்க் வியூ பஜார், சன்னிதி தெரு போன்ற பகுதிகளில் வியாபாரிகள் கடைகளை அடைத்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

 

இந்நிலையில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு நேற்று பிற்பகலில் வனத்துறை குழுவினர் வந்திருந்தனர். அவர்கள் கோயில் வளாகத்திற்குள் இருந்த யானை கட்டும் கூடம், யானைக்கு உணவுகள் தயார் செய்யும் பகுதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 

பின்னர்  யானை நவராத்திரி விழாவிற்கு அனுப்பி வைக்கப்படும் என உறுதியளித்தனர். இதனால் பக்தர்கள், வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.

You Might Also Like

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை

திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தேனிமாவட்டம்

வாரசந்தையில் அதிகரிக்கும் வழிப்பறி காவலர்கள்

November 11, 2024 22 Views
மருது சகோதரர்களின் பிறந்தநாள் விழா
கொடிசியாவில் ரா மேட் இந்தியா 2024 கண்காட்சி
‘ட்ரேக் ஜேசர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி’
நித்திரவிளை அருகே வக்கீலுக்கு அரிவாள் வெட்டு – வாலிபர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?