வேலூர்_21
பகுஜன் சமாஜ் கட்சி வேலூர் மாவட்டம் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அரவிந்த், மாவட்ட மகளிரணி தலைவி புஷ்பலதா பொதுச்செயலாளர் வக்கீல் ஷாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொறுப்பாளர் செல்லபாண்டியன், பா.ஜனதா எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மாநில துணைத்தலைவர் கே.ஜி.குட்டி, நீலப்புலிகள் இயக்க தலைவர் புரட்சிமணி இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் இராசி.தலித் குமார் மற்றும் பலர் கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இந்த கொலை வழக்கை உடனடியாக சி.பி.ஐ. விசாரிக்க தமிழக அரசு உத்தரவிடக்கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் தமிழ்இன மறுமலர்ச்சிக்கழக மாநில தலைவர் லியாகத் அலி, மாநில பொதுச்செயலாளர் சந்தோஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.