தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள சரவண பொய்கையில் குரோதி வருடம் கார்த்திகை மாத முதல் நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் அஸ்திரதேவர் எடுத்துவரப்பட்டு தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கார்த்திகை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி மூன்று வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள், மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர். சபரிமலை ஐயப்பன் கோவில் கார்த்திகை 1ம் தேதி துவங்கி மண்டல பூஜைகள் நடக்கும். தொடர்ந்து தை ஒன்றாம் தேதி மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். இதற்காக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து 40 நாட்கள் விரதம் இருந்து இருமுடி சுமந்து பயணம் செய்வர். அதேபோல் முருகனை தரிசனம் செய்வதற்காக பழனி, திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களும் மாலை அணிவித்து தங்களது விரதத்தை தொடங்கி பிராத்தனை செய்தார்கள்.