தென்தாமரைக்குளம் ஏப் 2
அய்யா வைகுண்டரின் 193-வது உதயதின விழாவை முன்னிட்டு அய்யா வைகுண்டர் வாலிபால் கிளப் மற்றும் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபால அறக்கட்டளை இணைந்து நடத்தும் 4-வது மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி வருகிற மே மாதம் 15,16 ,17 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது.
சாமிதோப்பு தலைமைபதி முன்பு நடைபெறும் இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் வருமான வரித்துறை, இந்தியன் வங்கி ,சுங்க இலாக ,எஸ்.ஆர்.எம் கல்லூரி அணிகளும் ,பெண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம் கல்லூரி,தென்னக ரயில்வே ,சிவந்த ஆதித்தனார் கல்லூரி,மினி ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் ஆகிய அணிகள் இடம் பெறுகின்றன.
ஆண்கள் பிரிவில் முதல் பரிசு பெறும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும் ,இரண்டாம் பரிசு ரூ.40 ஆயிரம் ரொக்க பணமும், மூன்றாம் பரிசு ரூ.30 ஆயிரம் ரொக்க பணமும் ,நான்காம் பரிசு ரூ.25 ஆயிரம் ரொக்க பணமும் வழங்கப்படுகிறது.
பெண்கள் பிரிவில் முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும், இரண்டாம் பரிசு ரூ.40 ஆயிரம் ரொக்க பணமும்,மூன்றாம் பரிசு ரூ.30 ஆயிரம் ரொக்க பணமும், நான்காம் பரிசு ரூ.25 ஆயிரம் ரொக்க பணமும் பரிசாக வழங்கப்படுகிறது.
போட்டி தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று சாமிதோப்பில் நடைபெற்றது .கூட்டத்திற்கு அய்யா வைகுண்டர் வாலிபால் கிளப் தலைவர் குரு பாலா ஜனாதிபதி தலைமை வகித்தார் .
துணைத் தலைவர் ராஜன் ,பொருளாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, செயலாளர் ராஜ சத்திய சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஹரிஷ் ,தங்கராஜ் ,உதயகுமார் ,அரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.