கம்பம்.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் மஹநவமி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில்,துணைத் தலைவர் சுனோதா செல்வகுமார்,நகராட்சி ஆணையர் வாசுதேவன் முன்னிலையில் வெகு விமர்சியாக நடைபெற்றது. சரஸ்வதி தேவிக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நகராட்சி அலுவலர்கள்,நகர் மன்ற உறுப்பினர்கள், மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவினை தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் சுண்டல் பிரசாதம் வழங்கப்பட்டது.