ஈரோடு மார்ச் 23
போதையற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் என்று வலியுறுத்தி நடைபயணம் நடைபெற்றது. ஈரோடு மாணிக்கம் பாளையத்தில் உள்ள
ஈரோடு பப்ளிக் பள்ளியில் தொடங்கிய இந்த நடைபயணம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.
ஈரோடு பப்ளிக் பள்ளி, இன்ட்ராக்ட் கிளப் மற்றும் ரோட்டரி கிளப் ஈரோடு சென் நவட்ரல் ஆகியவற்றின் சார்பில் இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் ஈரோடு பள்ளிப் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் ரோட்டரி கிளப்பின் உறுப்பினர்கள் இதர பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு பப்ளிக் பள்ளியின் தலைவர் சிவசுப்பிரமணியன், தாளாளர் திருமதி மைதலட்சுமி, செயலாளர் அருண் கணேஷ் மற்றும் துணைச்செயலாளர் அனித்தா ஆகியோரின் தலைமையில் நடந்த, இப்பேரணியை தலைமை விருந்தினர் ஈரோடு லோட்டஸ் ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் டாக்டர் சகாதேவன் வீரப்பன் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் பிரபு ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
மக்கள் சமுதாயத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் எதிராக உலக அளவில் எழுந்திருக்கும் பிரச்சினை போதை பழக்கம். இப்பழக்கமானது வயது வித்தியாசமின்றி சமுதாயத்தில் வேரூன்றியுள்ள காரணத்தால் இதனை ஒழிக்கும் நோக்கத்துடன் இந்த பேரணி நடத்தப்படுகிறது என்று இதில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் பேசினர்.
பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ், பதக்கம், டி-ஷர்ட் மற்றும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது.
போதையற்ற சமுதாயத்தை உருவாக்க விழிப்புணர்வு

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics