தர்மபுரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப் பொருட்கள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர் உடன் உதவி ஆணையர் நர்மதா துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் தனி வட்டாட்சியர் கேசவமூர்த்தி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உள்ளனர்



