திருப்பத்தூர்:பிப்:26,
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் க.சிவசௌந்தரவல்லி இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா இ.கா.ப.,முன்னிலையில் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாடடேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு,பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன்.மாநிலத்தின் வளர்ச்சிக்கும். மக்களின் நல்வாழ்விற்கும் நான் அற்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் என்று போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை மாவட்ட ஆட்சித் தலைவர் க.சிவசௌந்தரவல்லி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா இ.கா.ப.,முன்னிலையில் கல்லூரி மாணவ மாணவிகள் ஏற்றுக்கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு,
இந்நிகழ்வினை தொடர்ந்து போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் அதிர்வு கிராமிய கலைக் குழுவின் கலை நிகழ்ச்சியுடன் பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் மாணவ, மாணவிகள் கையில் பதாகைகள் ஏந்தி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம் தொடங்கி பேருந்து நிலையம், நகர காவல் நிலையம் , நீதிமன்றம், அரசு மருத்துவமனை ஆகிய பிரதான சாலைகளில் சென்று மீண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் வந்து முடித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கலால் உதவி ஆணையர் சதீஷ்குமார்,கலால் கோட்ட அலுவலர் குமார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இருந்தனர்.