அரியலூர், மே,23
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் செந்துறை ஊராட்சியில் புது காலனி பகுதியில் செந்துறை நீதித்துறை வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக குழந்தை திருமணம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையிலும் அதன் விவரம் குறித்த சட்ட நடைமுறை பற்றி குழந்தை திருமணங்களை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
செந்துறை நீதிமன்ற நீதிபதி ஆக்னஸ் ஜெப கிருபா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்லம் கடம்பன் வரவேற்று பேசினார்.
அரசு வழக்கறிஞர் ரமேஷ் மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவர் காரல் மார்க்ஸ் செயலாளர் செல்வமணி வழக்கறிஞர்கள் பாலு துணைச் செயலாளர் செல்வம் , சசிகுமார் அருள், காயத்ரி மற்றும் வழக்கறிஞர்கள் கருத்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கருத்துரை வழங்கிய நீதிபதி பெண் கல்வி பெண்கள் சுதந்திரம் பெண்களுக்கான உரிமைகள் குழந்தை திருமண பிரச்சனைகள் சிறார் தொடர்பான குற்றங்கள் பற்றியும் அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் சட்டப்படியான பாதுகாப்பு குறித்தும் விளக்கினார்கள். முடிவில் வழக்கறிஞர் உத்தமராஜன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சிராஜுதீன், சங்கர், சுப்பிரமணியன் , மணிவண்ணன், பிரபாகரன், மற்றும் பொதுமக்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நாட்டாமைக்காரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கு செந்துறை போலீசார் காவல் உதவி ஆய்வாளர் தங்கமணி தலைமையில் பாதுகாப்பு வழங்கினர்.