கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை நடைப்பயணம் சுகாதாரத்தை நோக்கிய மக்களின் பயணம் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு இன்று சந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணி ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது இதில் சந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மாணவிகள் கையில் பதாகைகள் ஏந்தி கிராம முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக மீண்டும் பள்ளி வந்து அடைந்தனர் இதில் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் பள்ளியின் தலைமை ஆசிரியர் மோட்சராணி உதவி தலைமையாசிரியர் குமார், பிரேம்லதா, மஞ்சு மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் துணை தலைவர் ஒருங்கிணைப்பாளர்புவனேஸ்வரி ஊராட்சி செயலாளர் உள்பட பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணி சிறப்பித்தனர்



