சங்கரன்கோவில்.ஜூலை.30.
சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மனித உரிமை கல்வி மற்றும் காப்புக்களம் சார்பில் குழந்தை கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை கீதாவேணி தலைமை வகித்தார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அமராவதி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு அருணா லட்சுமி, சமூக நலத்துறை காபிரியேல் , திமுக நகர செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். நெல்லை மனித உரிமை கல்வி காப்புக்களம் இயக்குனர் பரதன் கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார் .இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியதாவது,
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் ஆட்சியில் பெண் குழந்தைகளுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இன்று இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றும் வகையில் புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி ,பள்ளி மேலாண்மை குழு ,முட்டையுடன் கூடிய சத்தான மதிய உணவு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம், விலையில்லா சீருடை, விலை இல்லா மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வெற்றிகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இன்று பெண் குழந்தைகள் படிக்கும் வயதில் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை
சந்திக்க நேரிடும். அதை கருத்தில் கொள்ளாமல் கல்வி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு கல்வியில் சிறப்பாக பயின்று உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் இளம் வயதில் எதிர்கொள்ள நேரிடும் காதல் உள்ளிட்ட எந்த ஒரு விஷயங்களிலும் தலையிடாமல் உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள உழைக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பில் இந்தியாவில் திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது .இன்று சங்கரன்கோவிலில் இருந்து பல நூற்றுக்கணக்கான பெண்கள் சுருக்கெழுத்து உள்ளிட்ட பயிற்சிகளை பெற்று இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல் நீங்களும் கல்வியில் கவனம் செலுத்தி உயர்ந்த நிலையை அடைய வேண்டும். மேலும் விளையாட்டு மற்றும் உங்களிடம் உள்ள தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டு அதில் நீங்கள் சாதிக்க வேண்டும். தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் 33வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனு பாக்கர் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் .அதேபோன்று நீங்களும் உங்களை சாதனை மாணவிகளாக மாற்றிக்கொள்ள வேண்டும். மாணவிகள் தாங்கள் ஏதாவது எதிர்பாராத பிரச்சினையை சந்திக்க நேர்ந்தால் 1098 என்ற எண்ணை அழைக்க வேண்டும். அதில் உங்கள் தகவல்கள் பாதுகாக்கப்பட்டு உங்களுக்கான பிரச்சினையை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் அதே போல பெண்கள் உதவி எண் 181 என்ற எண்ணையும் ,உங்களது அலைபேசியில் யாரேனும் உங்களிடம் தவறான பதிவுகளை செய்யும் சூழ்நிலையில் சைபர் கிரைம் உதவி எண்ணான 1930 என்ற எண்ணையும், முதியோர்களுக்கான உதவி எண்ணான 14567 என்ற எண்ணையும், அழைத்தால் பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு இருப்பவர்களை மீட்க சம்பந்தப்பட்ட அரசு துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள். எனவே மேலே குறிப்பிட்ட நம்பர்களை தாங்கள் தேவைப்படும் சூழ்நிலைக்கு பயன்படுத்த வேண்டும் எனவும், பெண் குழந்தைகள் தங்களது உடலில் நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும், சத்தான உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பேசினார். தொடர்ந்து தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் பள்ளியில் சேதமான கட்டிடங்களை சரி செய்து செய்து தர வேண்டும், மின்விசிறி அமைத்து தர வேண்டும், விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதனை கேட்டுக் கொண்ட ராஜா எம்எல்ஏ கோரிக்கைகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, சகி ஒருங்கிணைப்பாளர் சேவை மையம் முருகேஸ்வரி ,மனித உரிமை கல்வி மற்றும் காப்புக்களம் மேரி,ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பிச்சையா , மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார், மற்றும் நிர்வாகிகள் வீரா, வீரமணி, வெங்கடேஷ்,
காவல்கிளி, சதீஷ், ஜெயக்குமார் ஜான், விக்னேஷ், பாட்டத்தூர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஆங்கில ஆசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.