மதுரை மாநகராட்சி
செல்லூர் பாரதியார் உயர்நிலைப்பள்ளியில்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில்
போதைப் பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில்
இப்பள்ளியில் பள்ளி முதல்வர் தலைமையில் ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு
திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ.தங்கமணி
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று
மாணவர்களுக்கு
சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்தும் பஸ்ஸில் பயணம் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்றும்
போதைப் பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி நகைச்சுவை கலந்த சிறப்புரையாற்றி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் ஆய்வாளரின் உரையை ஏற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.