ஈரோடு அக் 5
ஈரோடு மோளக்கவுண்டன் பாளையத்தில் பள்ளி மாணவ மாணவிகள் போக்குவரத்து விதிகளை அறிந்து கொள்வதற்காக ஈரோடு மாநகராட்சி சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவை ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் புதுப்பித்துள்ளது இந்த பூங்காவை பராமரிக்கும் பொறுப்பையும் இந்த பவுண்டேஷன் ஏற்றுக் கொண்டுள்ளது
புதுப்பிக்கப்பட்ட இந்த போக்குவரத்து விழிப்புணர்வு பூங்காவின் திறப்பு விழா ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமையில் நடந்தது கே இ பிரகாஷ் எம்.பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஒளிரும் ஈரோடு தலைவர் சின்னசாமி வரவேற்றார்.ஈரோடு மாநகராட்சி கமிஷனர் டாக்டர் மனிஷ் இந்த பூங்காவை திறந்து வைத்தார்
விழாவில் பிரகாஷ் எம் பி பேசியதாவது
ஒளிரும் ஈரோடு பல்வேறு பொது சேவைகளை செய்து வருகிறது அவர்களை ஊக்குவிக்க வைப்பது நமது கடமையாகும். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாடுபட்டு வருகிறார். தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் தமிழ்நாடு முன் உதாரணமாக விளங்க வேண்டும் என்று அவர் பாடுபட்டு வருகிறார்.
பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் அரசு துறை காவல் துறை மற்றும் பொது இடங்களில் பிளாஸ்டிக் டம்ளர்களை பயன்படுத்தக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட போலீஸ் இரண்டு ஜவகர் பேசியதாவது
வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
இதனால் விபத்துகளை முற்றிலுமாக தவிர்க்கலாம். போக்குவரத்து விதிகள் பற்றி மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தொழில் அதிபர் எஸ் கே எம் சந்திரசேகர் ஒளிரும் ஈரோடு செயலாளர் கணேசன் உள்கட்டமைப்பு குழு தலைவர் யோகேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உள்கட்டமைப்பு குழு உதவி தலைவர் குப்புசாமி நன்றி கூறினார்.



