மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் டாக்டர் வள்ளலார் ஆலோசனை வழங்கினார்
ராமநாதபுரம், அக்.17-
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்த மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் முன்னிலையில் தலைமை செயல் அலுவலர் தமிழ்நாடு கடல் சார்ந்த வாரியம் துணைத் தலைவர் மற்றும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் டாக்டர் வள்ளலார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைமை செயல் அலுவலர் தமிழ்நாடு கடல் சார் வாரியம் துணைத் தலைவர் மற்றும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் வடகிழக்கு பருவமழை ஒட்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்து தெரிவிக்கையில்;
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுவாக தண்ணீர் தேவை என்பது முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. இக்காலகட்டத்தில் இதுபோன்ற மழைக்காலங்களைக் கருத்தில் கொண்டு மழை நீர் கடலுக்குச் செல்லாமல் போதிய அளவு பண்ணை குட்டைகள் அமைத்தும் கண்மாய்கள் ஊரணிகள் ஆழப் படுத்த வேண்டும். கால்வாய்களை சீரமைத்தும் மழை நீரை முழுமையாக சேமித்திட வேண்டும். இதற்கு வேளாண்மை துறை பொதுப்பணித்துறை ஒருங்கிணைந்து திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
அதேபோல் வடகிழக்கு பருவமழை துவங்கியதை ஒட்டி எப்பொழுது வேண்டுமானாலும் அதிக அளவு மழை பெய்யும் அதை கருத்தில் கொண்டு சத்துணவு மையங்கள் அங்கன்வாடி மையங்கள் மற்றும் நியாயவிலை கடைகளுக்கு போதிய அளவு உணவுப் பொருட்கள் இருப்பு இருப்பதை கூட்டுறவுத்துறை நுகர்பொருள் வாணிபக் கழகம் மாவட்டம் வளங்கள் துறை போன்ற துறைகள் உறுதி செய்திட வேண்டும்.
மேலும் பொது சுகாதாரத்துறை கால்நடை பராமரிப்புத்துறை நகராட்சி பேரூராட்சி ஊராட்சி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து மக்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனை கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்குவதுடன் போதிய அளவு மருந்துகள் கையிருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
வருவாய்த்துறை காவல்துறை தீயணைப்பு துறை ஊரக வளர்ச்சித்துறை நகராட்சி நிர்வாகம் பேரூராட்சிகள் துறை ஆகிய துறைகள் மலை துவங்கியதை ஒட்டி அதிக தண்ணீர் தேக்குவதை முன்கூட்டியே கண்டறிந்து தண்ணீர் தேங்காமல் சீரமைத்து பணிகளை மேற்கொள்வதுடன் கழிவுநீர் தேங்காத வண்ணம் செல்வதை உறுதி செய்திட வேண்டும். அதேபோல் பொதுமக்களுக்கு குளோரினேசன் செய்யப்பட்ட சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியம் கண்காணிப்பு பணியில் இருந்து வருவதுடன் தாழ்வாக மின் பெயர்கள் செல்வதை கண்டறிந்து சரி செய்திடவும் அதேபோல் மின் சாதனங்கள் பாதிப்பு ஏற்படாமல் உடனடியாக சரி செய்திடும் வகையில் கூடுதலாக மின் மாற்றிகள் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அதிக தண்ணீர் சூழ்ந்திடும் பகுதியில் என கண்டறிந்து அங்கு மக்கள் தங்குவதற்கு சிறப்பு முகாம்கள் தயார் நிலையில் வைத்திட வேண்டும். நெடுஞ்சாலை துறையின் மூலம் சாலைகளில் மரங்கள் சாய்ந்தால் உடனடியாக அகற்றுவதற்கான உபகரணங்கள் தயார் நிலையில் வைத்திட வேண்டும். மேலும் மணல் மூட்டையில் போதிய அளவு ஈர்ப்பு வைத்துக் கொள்ள வேண்டும். காவல்துறை தீயணைப்புத்துறை வனத்துறை மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் இருந்திரவும் தற்போது துவங்கியுள்ள வடகிழக்கு பருவமழை துவங்கியதையொட்டி எவ்வளவு மழை வந்தாலும் மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு வராத வண்ணமும் அதேபோல் கால்நடைகளுக்கு பாதிப்பு வராத வகையில் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்திட பாதுகாத்திடும் வகையில் அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும்,
இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (பயிற்சி) வீர பிரதாப் சிங், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, உதவி ஆட்சியர் (பயிற்சி) முகமது இர்ஃபான், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



