மார்ர்தாண்டம், பிப்- 16
மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர்
பம்மம் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வருகிறார். 2 மாதத்தில் இவருக்கு திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதால் வேலை முடிந்து தினமும் ஆட்டோவில் வீடு திரும்புவது வழக்கம்.
நேற்று அவர் வழக்கமாக செல்லும் ஆட்டோவை தொடர்பு கொண்ட போது அதன் டிரைவர் வேறு சவாரி சென்றுள்ளதாகவும், மற்றொரு ஆட்டோ ஏற்பாடு செய்ததாக கூறி, நட்டாலம் பகுதியை சேர்ந்த 35 வயது போதை ஆசாமி ஒருவர் வந்துள்ளார்.
ஆட்டோவில் இளம்பண் ஏறிதும் டிரைவர் தேவை இல்லாமல் ஆபாசமாக பேசினார். இதை பெண் கண்டித்தார். இந்த நிலையில் தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் ஆட்டோவை நிறுத்தும்படி பெண் கூறி உள்ளார். ஆனால் போதையில் இருந்த டிரைவர் ஆட்டோவை நிறுத்தாமல் வேகமாக ஓட்டியுள்ளார்.
இதனால் பதறிய இளம்பெண் கத்தி விட்டார் அதனை கண்டு கொள்ளாத டிரைவர் ஆட்டோவை வேகமாக ஓட்டியுள்ளார். தொடர்ந்து இளம்பெண் வேறு வழி என்று ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார். ஆட்டோ டிரைவர் தப்பி சென்று விட்டார். அந்த பகுதியினர் ஆட்டோவை துரத்தி சென்றும் கிடைக்கவில்லை.
படுகாயம் அடைந்த அவரை மார்த்தாண்டத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மார்த்தாண்டம் போலீசார் ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.