தென்காசி மாவட்டம் தென்காசி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கணக்கப்பிள்ளை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சிமன்ற தலைவர் ஈஸ்வரி தலைமையில் நடைபெற்ற உள்ளாட்சிகள் தின கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் கலந்து கொண்டார்.
கிராமசபை கூட்டத்தில் , கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல் கிராம ஊராட்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சிறப்பாக சேவை புரிந்த தூய்மை காவலர்கள் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு கிராம சபை மூலம் பாராட்டு தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களை கௌரவித்தல் கிராம ஊராட்சியின் முதுகெலும்பாக திகழும் மகளிர் சுய உதவி குழுக்களை ஊக்குவிக்கும் பொருட்டு சிறப்பாக செயல்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பாராட்டு தெரிவித்தல் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளுதல் தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் செயல்படும் கிராம குடிநீர் உட்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துதல் தீன் தயாள் உபாத்தியா கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு கூட்டாண்மை வாழ்வாதாரம் 2024-2025 வாழ்வாதார திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் பெயர் மாற்றம் மற்றும் பெயர் சேர்த்தல் மற்றும் கிராமசபையின் ஒப்புதலுக்கு கொண்ட வர வேண்டிய இதர பொருள்கள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கிராமசபைக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அனிதா ,உதவி இயக்குநர் (கால்நடை பராமரிப்பு) உமா மகேஸ்வரி, தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், மாரியம்மாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) கனகம்மாள், மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, கணக்கப்பிள்ளை ஊராட்சிமன்ற துணைத்தலைவர் ராமஜெயா மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.