கிருஷ்ணகிரி செப் 4: கிருஷ்ணகிரி பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றம் உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டம் ஜெயலட்சுமி திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் சிவப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது, கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் முனிராஜ் அவர்கள் முன்னிலை வகித்தனர். உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் கவியரசு, மாதப்பன், G.கிருஷ்ணன், மற்றும் கிருஷ்ணகிரி சட்டமன்றத்துக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் மண்டல் தலைவர்கள், சக்திகேந்தர பொறுப்பாளர்கள் மற்றும் கிளை தலைவர்கள், கிளை நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



