வேலூர்_13
வேலூர் மாவட்டம், வேலூர் சலவன் பேட்டை எம்ஜிஆர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழாவில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ,லட்சுமி ஹோமம், தன பூஜை, விமானம் மூலவர், மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும், மண்டல அபிஷேக பூஜை ஆரம்பமும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், விழா குழு தலைவர் M.A.ராஜா முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், ஏகே டிவி சரவணன் ,அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் எஸ். ஆர் .கே. அப்பு. வேலூர் பேலஸ் ரெசிடென்சி உரிமையாளர் சுரேந்தர், மரகத கோட்டை வாராஹி சுவாமிகள், டாக்டர் வி. எஸ். விஜய், டாக்டர் ஐயப்பன் நாட்டாண்மை சந்திரன், கணேஷ் ஐயர் ,மற்றும் விழா குழுவினர்கள் தனசேகர், புண்ணிய கோட்டி, சுரேஷ், சுகன்யா ,காயத்ரி, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.