சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள திருஉடையார்புரம் .
இந்த ஊரில் அருள்மிகு ஸ்ரீ தடியார் உடையார் அய்யனார் கோவில் அமைந்துள்ளது . இந்தக் கோவில் விழாவின் போது பெரும்பாலை என்னும் ஊரைச் சேர்ந்த துரைச்சிங்கத் தேவர் மகன் தர்மராஜ் என்பவர் ஐம்பொன் உற்சவர் சிலைகளைச் செய்து உபயமாக கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார் . இதனால் கோவில் நிர்வாகத்தினரும் , பக்தர்களும் மகிழ்ச்சி தெரிவித்து தங்களது நன்றியைத் தெரிவித்தனர் . இதைத் தொடர்ந்து கோவிலில் கணபதி ஹோமம் , அபிஷேகங்கள் , வான வேடிக்கைகள் நடைபெற்றது . விழாவில் நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . அப்போது நாலு கோட்டை ராஜ்குமார் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு ஆயிரக் கணக்கில் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார் .
இளையான்குடி அருள்மிகு ஸ்ரீ தடியார் உடையார் அய்யனார் கோவில் விழா

Leave a comment