திண்டுக்கல் தாமரைப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நிகழ்ச்சி.
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு வட்டாரம் எம்.எம்.கோவிலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட தாமரைப்பாடி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக பொது சுகாதாரத் துறை இயக்குனரின் அறிவுறுத்தலின் பேரிலும் திண்டுக்கல் சுகாதார மாவட்டம், மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் ஆர்.செல்வகுமார் அறிவுரையின் பேரிலும் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தாடிக்கொம்பு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.அ.சீனிவாசன் தலைமை தாங்கி மருத்துவ முகாமின் திட்ட விளக்க உரையாற்றினார். தாமரைப்பாடி ஊராட்சி தலைவர் பி.அமரஜோதி, துணைத் தலைவர் டி. பீட்டர்ஜோசப் ஆகியோர் துவக்க விழாவில் கலந்து கொண்டனர். இம்முகாமில் பொதுமக்களுக்கு பொது மருத்துவம் , பல், காது, மூக்கு ,தொண்டை , சித்த மருத்துவம், HIV பரிசோதனை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், காசநோய் போன்றவைகளுக்கான மருத்துவ பரிசோதனைகளுடன் இருதய நோய் ,சர்க்கரை நோய், புற்றுநோய் முதியோர்க்கு தேவையான பரிசோதனைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது, மேலும் தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டது. தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. இந்த முகாமில் பொதுமக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியை எம்.எம். கோவிலூர் மருத்துவ அலுவலர் டாக்டர். அசோக்குமார் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம், சமுதாய சுகாதார செவிலியர் சுபாஷினி, பகுதி சுகாதார செவிலியர் லதா, சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், சுப்பிரமணியன், நெல்சன், கிராம சுகாதார செவிலியர்கள் பாண்டீஸ்வரி, சொர்ணலதா, சரோஜினி, இடைநிலை சுகாதார செவிலியர் மாணிக்க ஜீவிதா மேரி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.