சென்னை, மே – 30,
ஃபஸ்ட் வேல்ர்ட் கம்யூனிட்டி யின் மகளிர் அமைப்பான பெண் சக்தி மற்றும் எஸ்னோவேஷன் இணைந்து தொழில் முனைவோருக்கான செயற்கை நுண்ணறிவு பயிற்சி பட்டறை துவக்க விழா நிகழ்ச்சி சென்னை :அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்றது.
ஒவ்வொரு செவ்வாய் கிழமை தோறும் நடைபெறவிருக்கும் இப்பயிற்சி முதல் நான் துவக்கவிழா நிகழ்ச்சியை ஃபஸ்ட் வேல்ர்ட் கம்யூனிட்டி நிறுவனத் தலைவர் அசோக்குமார் துவக்கி வைத்தார். மேலும் இதில் எஸ்னோவேஷன் இணை நிறுவனர் முனைவர் நீரை காயத்ரி,.அடோபில் தரவு பன்னாட்டு நிறுவனத்தின் விஞ்ஞானி விஜயராவ் ஆதிமூலம், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் பயிற்சி இயக்குனர் முனைவர் சுலோச்சனா. மைண்ட்ஸ்டைன் அகாடமி இணை நிறுவனர் கீர்த்திகா செல்லப்பா ஆகியோர் இணைந்து செயற்கை நுண்ணறிவுக்கான பயிற்சியை அளித்தனர் .
இது குறித்து நிறுவனத் தலைவர் அசோக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
இதில் பெரும்பாலும் இல்லத்தரசிகள் மாணவர்கள் கலந்துகொண்டனர். 21ஆம் நூற்றாண்டில் வளர்ந்து வரும் தொழில் நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப திறமைகளை வளர்க்கும் வகையில் தீர்க்கமாக சிந்தித்தல், படைப்பாற்றல், தகவல் பரிமாற்றம், கூட்டு முயற்சி, டிஜிட்டல் அறிவு இது போன்ற திறமைகளை மாணவர்களிடம் வளர்த்தெடுப்பதற்காக இப்பயிற்சி பட்டறைகள் அமையும் பெண்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி பயிற்சி கட்டணம் மிகக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஃபஸ்ட் வேல்ர்ட் கம்யூனிட்டி அதன் மகளிர் பிரிவு மற்றும் ஏஸ்னோவேஷனும் இணைந்து புதிய முயற்சி ஒன்றை முன்னிறுத்திள்ளனர் என்று அவர் தெரிவித்தார்..