கன்னியாகுமரி நவ 18
குமரி மாவட்டம் வட்டுக்கோட்டை அடுத்த ஆமணக்கன்விளை ஊரில் சமுதாய நலக்கூடம் அமைக்க ஊர்மக்கள் விடுத்த கோரிக்கையினை ஏற்று கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.35 இலட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு நேற்று அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில் தோவாளை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளரும்,ஆரல்வாய்மொழி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவருமான முத்துக்குமார் ,அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜெஸீம்,தெற்கு ஒன்றியச் செயலாளர் தாமரைதினேஷ்,அஞ்சுகிராமம் பேரூர் செயலாளர் ராஜபாண்டியன் உட்பட அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.