கோவை: மார்ச்: 08
பொள்ளாச்சியின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான மாரியம்மன் திருக்கோவில் தேரோட்டத்தின் இரண்டாம் நாளன்று பொள்ளாச்சி பெரிய பள்ளிவாசல் சார்பாக இஸ்லாமிய பெருமக்கள் அம்மனுக்கு சீர்வரிசைகள் கொடுத்து சிறப்பித்தனர். சீர் வரிசையினை கோயில் பரம்பரை அறங்காவலர் மானிக்கம் மற்றும் அவர்களின் புதல்வன் ஹரிஹரசுதன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி மாரியம்மன் திருக்கோவில் சார்பாக இஸ்லாமிய பெருமக்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். பள்ளிவாசல் ஜமாத்தார்கள் சார்பில் பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. விழாவில் கோயில் செயல் அலுவலர் சீனிவாச சம்பத் பெரிய பள்ளி நிர்வாகிகள் தலைவர் ஹாஜி. ஜாகீர் உசேன், செயலாளர் ஹாஜி.அன்வர் பாஷா, பொருளாளர் முஸ்தாக் அகமது, 26 வது நகரமன்ற உறுப்பினர் M.K சாந்தலிங்கம் பள்ளி நிர்வாகிகள் காஜா நவாஸ், மாஹின் நசீர்,ஐ.பாபு, முகமது ரபி, இனாயத்துல்லா கான், நசீர் அகமது, அலாவுதீன் பாட்சா மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்துகொண்டனர்.