தீபாவளி திருநாளை முன்னிட்டு பேருந்துகளை இயக்கிய வகையில் 04.11.2024 அன்று போக்குவரத்துக் கழகம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிக அதிக பட்ச வருவாயாக ரூ.380.19 இலட்சம் ஈட்டியுள்ளது. மேலும் போக்குவரத்துக் கழக மண்டலங்களை பொறுத்தமட்டில் 04.11.2024 அன்று திண்டுக்கல் மண்டலம் அதிக பட்ச வருவாயாக ரூ.161.60 இலட்சம் ஈட்டியுள்ளது என்பதை நான் பெருமையுடன் கூறிக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்கி பயணிகளுக்கு எந்த ஒரு அசௌகரியம் இன்றி பயணம் செய்ய ஏதுவாக பயணிகளின் அடர்வுக்கு
ஏற்றவாறு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த மூன்று மண்டலங்கள் மூலம் கழக வருவாய் உயர்வடைய இரவு பகல் பாராமல் முனைப்புடன் செயல்பட்ட அனைத்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், முனைப்பணி புரிவோர், பேருந்து நிலைய பொறுப்பாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், பயணச்சீட்டு ஆய்வாளர்கள், அலுவலக மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள், கிளை மேலாளர்கள், அலுவலர்கள், அனைத்து தொழிற்சங்க பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து பிரிவு பணியாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டார். மேலும், இதே போன்று இனி வரும் நாட்கள் மற்றும் விழாக் காலங்களில் அனைத்துப் பணியாளர்களும் ஒன்றிணைந்து முனைப்புடன் பணியாற்றி, பயணிகளுக்கு நன்கு சேவை செய்திடவும், நமது போக்குவரத்துக் கழகத்திற்கு அதிகபட்ச வருவாயை ஈட்டித்தரவும்
மேலாண் இயக்குநர் இரா. சிங்காரவேலு கேட்டுக்கொண்டார்.